இரண்டு மணி நேரத்தில் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய ஓட்டப்பிடாரம் எம். எல்.ஏ.சண்முகையாவில் செயலை கண்டு பொதுமக்கள் வியந்து அவரை பாராட்டி வருகின்றனர்.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேர்வைக்காரன் மடம் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைக்க வருகை தந்த ஓட்டப்பிடாரம் எம். எல்.ஏ சண்முகையாவிடம் சக்கம்மாள்புரம் கிராம பொதுமக்கள் நான்கு மாதங்களுக்கு முன்பு ஒடிந்து விழுந்த மின்கம்பம் மாற்றப்படாமல் உள்ளது எனவும், இதனால் அப்பகுதியில் உள்ள தெருக்களில் மின் விளக்கு எரியவில்லை எனவும் மின்கம்பத்தை மாற்றம் செய்ய உதவி செய்யயும்படி பொது மக்களால் கோரிக்கை வைத்தனர்
இதனையடுத்து, கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் நேரடியாக இடத்தை பார்வையிட்ட எம்.எல்.ஏ சண்முகையா அங்கிருந்தபடியே மின்வாரிய உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் ஆகியோரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக இந்த இடத்தில் புதிய மின்கம்பம் அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொண்டதன் பேரில் 2 மணி நேரத்திற்கு உள்ளாக அந்த இடத்தில் புதிய மின்கம்பம் நடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி கொடுத்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சண்முகையா எம்எல்ஏவின் செயலை கண்டு, இப்படியும் ஒரு எம்எல்ஏ இருக்காரா என மனுகொடுத்த அந்த பொதுமக்கள் அசந்து போனதோடு, பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி தந்த எம்.எல்.ஏ சண்முகையா விற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்ததோடு மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்



