கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்படுத்தியதில் குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் லெவல் கிராசிங் ஒன்று இருந்தது. அதன் வழியே அந்த பள்ளி வேன் கடந்து செல்ல முயன்றது.
அப்போது,அந்த பகுதியின் வழியே சிதம்பரம் நோக்கி ரெயில் சென்றது. ரயில் பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது. இதில் வேனில் இருந்த குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில், தற்போது வரை 2 பேர் பலியாகி உள்ளனர். வேன் ஓட்டுநர் மற்றும் பள்ளி குழந்தைகள் பலர் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான காரணம் பற்றி தெரிய வரும். செம்மங்குப்பம் ரயில்வே கேட் மூடப்படாததால் இந்து விபத்து நடத்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்தத்தோடு, விபத்து நடந்த பகுதியில் கேட் கீப்பர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர்.



