• vilasalnews@gmail.com

30 நாட்களில் பட்டா... தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு!

  • Share on

பொதுமக்கள் விண்ணப்பித்த 30 நாட்களில் பட்டா வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இன்றைக்கு பட்டா வாங்குவது என்பது பலருக்கும் பெரும் சவாலான விஷயமாக உள்ளது. பட்டாவுக்கு விண்ணப்பிப்பது மிக எளிது. ஆனால், அதை பெற விஏஓ, சர்வேயர், தாசில்தார் என வருவாய்துறை அலுவலர்களின் ஒப்புதலுக்கு பிறகு நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகே பட்டா கிடைக்கும். பட்டா பெற தாமதம் ஏற்படுவதாகவும், இதனால் கையூட்டு கொடுக்கும் நிலை உள்ளதாகவும் புகார்கள் உள்ளது.


இந்த நிலையில் பொதுமக்கள் விண்ணப்பித்த 30 நாட்களில் பட்டா வழங்க வேண்டும். காலதாமதம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.


தமிழ்நாடு அரசு பட்டா குறித்த சேவைகளுக்கு விண்ணப்பிப்பதை டிஜிட்டல் மயமாக்கியுள்ளது. இதுதவிர பெயர் மாற்றம் மற்றும் நீக்கம் குறித்த சேவைகள், புதிய பட்டா விண்ணப்பம் உள்ளிட்ட சேவைகளையும் ஆன்லைன் படுத்தப்பட்டுள்ளது. 


இந்தநிலையில், பட்டா கோரி விண்ணிப்பத்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் பட்டா வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.  தமிழக அரசின் இந்த உத்தரவிற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

  • Share on

மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் சஸ்பெண்ட்

பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000... முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்!

  • Share on