• vilasalnews@gmail.com

டெல்லியில் இபிஎஸ்... தமிழக அரசியலில் திடீர் திருப்பம்!

  • Share on

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தீவிரமான வியூகங்களை வகுத்து வருகிறது.


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சந்திப்பின் போது கூட்டணி விவகாரங்கள் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:


எடப்பாடி பழனிசாமி ஏன் டெல்லி சென்றார் என்பது குறித்து அவருக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தான் தெரியும் என்று கூறியுள்ளார்.வரும் மார்ச் 11-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வருகிறார். திருச்சியில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டில் பிரதமர் உரையாற்றுகிறார்.இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இரண்டு இடங்கள் பரிசீலனையில் உள்ளன.கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்துப் பேசிய அவர், நேற்று கூட்டணித் தலைவர்களுடன் முதற்கட்ட ஆலோசனைகள் மட்டுமே நடத்தினோம். முறைப்படியான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே தொடங்கும், என்று விளக்கமளித்தார்.


மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகத் தேசிய மகளிர் ஆணையமே சுட்டிக்காட்டியுள்ளது. உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்ற நோக்கில் தான் திமுக இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது என்றும், பண பலத்தை விட மக்கள் பலமே இந்தத் தேர்தலில் வெல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.

  • Share on

புதிய வரவுகளால் நெருக்கடியில் திமுக கூட்டணி : வைகோவின் 'இரட்டை இலக்க' கனவு பலிக்குமா?

திமுக கூட்டணி 2026: இதுவரை கையெழுத்தான தொகுதிகள் எத்தனை? வில்லங்கமாகிறதா தொகுதிப் பங்கீடு!

  • Share on