• vilasalnews@gmail.com

புதிய வரவுகளால் நெருக்கடியில் திமுக கூட்டணி : வைகோவின் 'இரட்டை இலக்க' கனவு பலிக்குமா?

  • Share on

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தையில், வைகோ தலைமையிலான மதிமுக முன்வைத்துள்ள கோரிக்கைகள் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த முறை 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றதைச் சுட்டிக்காட்டிய மதிமுக, இந்த முறை இரட்டை இலக்கத்தில் பேச்சைத் தொடங்கியது. இறுதியில் 8 தொகுதிகளாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் பேச்சுவார்த்தையில் இறங்கினர்.


கூட்டணியில் மநீம, தேமுதிக உள்ளிட்ட புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் இடப்பற்றாக்குறை நிலவுகிறது. எனவே, கடந்த முறை ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளை விடக் குறைவாக, 4 தொகுதிகளை மட்டுமே வழங்க திமுக முன்வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மதிமுக நிர்வாகிகள், தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டாம் என வலியுறுத்தி வருகின்றனர்.


மதிமுக இம்முறை முன்வைத்துள்ள மிக முக்கியமான கோரிக்கை 'தனிச் சின்னம்'. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவின் 4 எம்.எல்.ஏ-க்களும் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டனர். ஆனால், சமீபத்திய மக்களவைத் தேர்தலில் துரை வைகோ தீப்பெட்டிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், சட்டமன்றத் தேர்தலிலும் தனிச் சின்னத்தில் நிற்க அக்கட்சி ஆர்வம் காட்டுகிறது.


மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடுவதில் பிடிவாதம் காட்டினால், அவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கையை திமுக மேலும் குறைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

  • Share on

அதிமுக இனி தெளிந்த நீரோடை - சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்!

டெல்லியில் இபிஎஸ்... தமிழக அரசியலில் திடீர் திருப்பம்!

  • Share on