• vilasalnews@gmail.com

விஜய் கட்சிக்கு வருகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்? தமிழக அரசியலில் திடீர் திருப்பம்!

  • Share on

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணிக் கணக்குகள், கட்சித் தாவல்கள் குறித்த பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதிமுகவில் இந்த முறை ஜெயக்குமாருக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது. அவர் விருப்பப்பட்டால் தாராளமாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் வந்து இணையலாம். மேலும், சசிகலா தரப்புடன் விஜய் தரப்பினர் கூட்டணி குறித்து மதுரையில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகின்றன.


தவெக-வின் வருகையால்தான் காங்கிரஸிற்கு திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கிடைத்துள்ளன. எங்களைக் காட்டி பேரம் பேசி அதிக இடங்களைப் பெற்றுள்ளனர், என்று செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.


ஆட்சியில் பங்கு என விஜய் வெளிப்படையாக அறிவித்த போதிலும், தற்போதுள்ள பிரதானக் கட்சிகள் திமுக அல்லது அதிமுக தலைமையிலான அணிகளிலேயே நீடிக்கின்றன. இதனால் தவெக இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளதாகப் பார்க்கப்படுகிறது. எனினும், தேர்தல் நேரத்தில் இன்னும் பல மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


  • Share on

அதிமுகவின் எதிர்காலம் குறித்து ப. சிதம்பரம் வெளியிட்ட பகீர் கணிப்பு!

அதிமுக கூட்டத்தில் அனல் பறந்த பேச்சு : ஓபிஎஸ், கமல், பிரேமலதா என ஒருவரையும் விடாத விந்தியா!

  • Share on