• vilasalnews@gmail.com

அதிமுகவின் எதிர்காலம் குறித்து ப. சிதம்பரம் வெளியிட்ட பகீர் கணிப்பு!

  • Share on

தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடிவடைந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை மிகக் கடுமையாகச் சாடிப் பேசினார்.


திமுக - காங்கிரஸ் இடையே நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்து, நேற்று அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தானது. காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும்   ஒரு ராஜ்யசபா இடமும் வழங்கப்பட்டுள்ளது. 


கூட்டத்தில் உரையாற்றிய ப. சிதம்பரம், பாஜகவின் வருகை ஒரு நாட்டிற்கும் அரசிற்கும் எவ்வித நன்மையையும் தராது என்று கடுமையாகத் தாக்கினார்.  தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் நாகரிகத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், நம் மொழியான தமிழைக் காக்க வேண்டும். தமிழைப் பாதுகாக்க வேண்டுமானால், பாஜகவை நாம் ஒவ்வொரு தேர்தலிலும் தோற்கடிக்க வேண்டும். தமிழகத்திற்குள் அவர்கள் நுழையவே முடியாத அளவிற்கு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.


இந்தத் தேர்தல் களம் நேரடியாக திமுக கூட்டணி vs பாஜக கூட்டணி என்றே அமையும் என்று குறிப்பிட்ட அவர், அதிமுகவின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்தார். அமித் ஷாவின் பிடியில் அதிமுக சிக்கியுள்ளது. பாஜகவுடன் கைகோர்த்த கணமே அதிமுகவின் அழிவு தொடங்கிவிட்டது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் அதிமுக என்ற கட்சியே இருக்காது. அந்தக் கட்சியில் உள்ள மிச்சமிருப்பவர்களையும் பாஜக கபளிகரம் செய்துவிடும்.


இந்தத் தேர்தலில் அதிமுகவிற்கு எந்த வேலையும் இல்லை என்றும், போட்டி என்னவோ திமுகவிற்கும் பாஜகவிற்கும் தான் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார். திமுகவினர் கடந்த நான்கு மாதங்களாக மேற்கொண்டு வரும் தீவிரப் பிரச்சாரத்தைப் பாராட்டிய சிதம்பரம், மகளிர் அணியினர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பது பெரும் பலம். இதே வேகத்தை அடுத்த 40 நாட்களுக்குத் தொண்டர்கள் தொடர வேண்டும். தளர்வின்றி உழைத்தால் ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் அமர்வது உறுதி, என்று உற்சாகப்படுத்தினார்.

  • Share on

திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு நிறைவு; அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பது ஏன்?

விஜய் கட்சிக்கு வருகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்? தமிழக அரசியலில் திடீர் திருப்பம்!

  • Share on