• vilasalnews@gmail.com

திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு நிறைவு; அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பது ஏன்?

  • Share on

தமிழக சட்டசபைத் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை விறுவிறுப்பாக முடித்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் தரப்பில் தொகுதிப் பங்கீடு தொடர்பான ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளன.


திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்குப் போட்டியிட 28 தொகுதிகளும், கூடுதலாக ஒரு ராஜ்ய சபா இடமும் ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு முன்பாகவே இந்த சுமுக முடிவு எட்டப்பட்டிருப்பது திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தகட்டமாக விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் போன்ற தோழமைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு, முழுவீச்சில் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.


திமுக - காங்கிரஸ் கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, அதிமுக மற்றும் பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 28 இடங்களை விட அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.


கடந்த தேர்தலில் 20 இடங்களில் போட்டியிட்ட பாஜக, இந்த முறை 35 இடங்களுக்குக் குறையாமல் எதிர்பார்க்கிறது. அமமுக உள்ளிட்ட மற்ற சிறிய கட்சிகளுக்கான இடங்களையும் சேர்த்து, சுமார் 55 தொகுதிகள் வரை பாஜக தரப்பில் கேட்கப்படுவதாகத் தெரிகிறது. பாஜகவின் இந்த அதிக தொகுதிக் கோரிக்கை குறித்து அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது அக்கட்சியின் சில முக்கிய நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


திமுக தனது முதல் கட்டப் பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி எப்போது தொகுதிப் பங்கீட்டை அறிவிக்கும் என்பதே தற்போதைய அரசியல் வட்டாரத்தின் எதிர்பார்ப்பாக  உள்ளது.

  • Share on

நாடாளுமன்றத்தில் முதன்முறையாக தேமுதிக... முரசு முழங்குமா? முடங்குமா?

அதிமுகவின் எதிர்காலம் குறித்து ப. சிதம்பரம் வெளியிட்ட பகீர் கணிப்பு!

  • Share on