• vilasalnews@gmail.com

மாறியது பெயர்... Tuticorin இனி இல்லை!

  • Share on

தூத்துக்குடி விமான நிலையத்தின் ஆங்கிலப் பெயரான 'Tuticorin' என்பது முறைப்படி தமிழ் உச்சரிப்பிற்கு இணங்க ‘Thoothukudi Airport’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


ஆங்கில உச்சரிப்பில் Tuticorin என இருக்கும் தூத்துக்குடி விமான நிலையத்தின் பெயரை தமிழ் உச்சரிப்பின் படி தூத்துக்குடி என பெயர் மாற்றம் செய்யக் கோரி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவிடம், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை விடுத்திருந்தார்.


இந்த நிலையில், Tuticorin என்ற பெயரினை, தூத்துக்குடி விமான நிலையம் என்று மாற்றம் செய்வதற்கான விழா, தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு "தூத்துக்குடி விமான நிலையம்" என பெயர் பலகையை திறந்து வைத்து Tuticorin என்ற பெயரினை, தூத்துக்குடி விமான நிலையம் என்று மாற்றம் செய்து வைத்தார்.


  • Share on

தூத்துக்குடி மாணவி படுகொலை விவகாரம்... திசை மாறும் போராட்டம்!

விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு பாஜக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவகாரம்... இதோ விபரம்!

  • Share on