• vilasalnews@gmail.com

வைகோவை பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக் குழுவினர் சந்தித்தது ஏன் ?

  • Share on

பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக் குழுவின் புதிய நிர்வாகிகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.


சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை   அலுவலகமான தாயகத்தில் பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக் குழுவின் புதிய நிர்வாகிகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து அவருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்து வாழ்த்து பெற்றனர்.


இந்தச் சந்திப்பின் போது ஆலயக் குழுவினரை இன்முகத்துடன் வரவேற்ற வைகோ, வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துரையின் வீரத் தியாகங்கள், ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர்கள் நடத்திய தீரமிக்க போர்கள், நமது சமூகத்தின் கலாச்சாரப் பங்களிப்பு மற்றும் ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்புகள் உள்ளிட்ட பாஞ்சாலங்குறிச்சியின் வீர வரலாறு குறித்து நெகிழ்ச்சியுடன் அவர்களுடன் உரையாடினார். 


மேலும்  ஆலயப் பணிகளுக்குத் தேவையான அனைத்துத் தார்மீக ஆதரவையும் எப்போதும் வழங்குவதாக பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக் குழு நிர்வாகிகளிடம் வைகோ உறுதி அளித்தார். இந்தச் சந்திப்பின் போது ஆலயக் குழுவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

  • Share on

திமுகவில் ஐக்கியமான ஓபிஎஸ்... தூத்துக்குடி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு!

தூத்துக்குடி : மாவு மில் உரிமையாளரை வெட்டிய சிறுவன் - ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு!

  • Share on