• vilasalnews@gmail.com

ரூ.9.69 கோடி உபரி வருவாய்... ஆனால் அதிமுக வெளிநடப்பு - மேயர் ஜெகன் பெரியசாமி தாக்கல் செய்த மேஜிக் பட்ஜெட்!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூபாய் 9.69 கோடி உபரி வருவாய் பட்ஜெட்டை மேயர் ஜெகன் பெரியசாமி தாக்கல் செய்து 45 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.


தூத்துக்குடி மாநகராட்சியில் பட்ஜெட் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்தில் 2026-27 ஆம் நிதியாண்டுக்கான உத்தேச வரவு செலவு அறிக்கையை மேயர் ஜெகன் பெரியசாமி தாக்கல் செய்து பேசியதாவது:-


தூத்துக்குடி மாநகராட்சியில் 2026 - 27 ஆம் நிதியாண்டில், வருவாய் நிதியில் சொத்து வரி, இதர வரி, வரயில்லாத இனங்கள், முத்திரை கட்டணம், கேளிக்கை வரி, அரசு மானியம், மாநில பகிர்மான நிதி, 15 வது நிதி குழு மானியம் மற்றும் ஏனைய வருமானங்கள் என மொத்தம்  ரூ.17697.42 லட்சம் வருவாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.


நிர்வாக செலவினங்கள், சாலை, கட்டிடங்கள் மற்றும் இதர பராமரிப்பு, இயக்க செலவினங்கள், நிதி மற்றும் இதர செலவினங்கள், பொது நிதி பங்களிப்பு என மொத்தம் ரூ.17398.65 லட்சம் செலவாகும் என உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் ரூ.298.77 லட்சம் உபரியாக வருமானமாக கிடைக்கும்.


மேலும் குடிநீர் வரி கட்டணம் உள்ளிட்ட இதர வகையில் ரூ. 6464.40 லட்சம் வருமானமாக பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இதில் சம்பளம் மற்றும் ஓய்வூதியர் செலவினங்கள், குடிநீர் பணி இயக்கம் மற்றும் பராமரிப்பு செலவினங்கள், நிர்வாக மற்றும் இதர செலவினங்கள் நிதி செலவினங்கள் என மொத்தம் ரூ.6121.61 லட்சம் செலவாகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் உபரியாக ரூ.342.79 லட்சம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கல்வி வரி, இதர வருமானம் என மொத்தம் ரூ.866.82 லட்சம் வருமானம் கிடைக்கும். இதில் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு செலவினங்கள், நிர்வாக செலவினங்கள் மற்றும் இதர செலவினங்கள் என மொத்தம் ரூபாய் 539 லட்சம் செலவாகும் எனவும் தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் உபரியாக ரூ.327.82 லட்சம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதன்மூலம் 2026 - 27 ஆம் நிதியாண்டில் மொத்தமாக ரூபாய் 969.38 லட்சம் ( ரூ.9.69 கோடி)  உபரி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


2026-27 ஆம் ஆண்டில் 278 புதிய சாலைகள், முதல்வர் படிப்பகம், 5 சாலைகளை மோட்டார் இல்லாத போக்குவரத்து சலைகளாக மாற்றுதல், நடைபாதை வியாபாரிகளுக்கான விற்பனை மண்டலங்கள் அமைத்தல், 100 ஏக்கர் பரப்பில் மரங்கள் நடுதல், பத்து வார்டுகளில் 24 மணி நேர குடிநீர் விநியோகம், ஐந்து இடங்களில் புதிய குளங்கள் அமைத்தல், மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி, கழிவுகளில் இருந்து இயற்கை எரிவாயு தயாரித்தல், குப்பையில் இருந்து எத்தனால் தயாரிக்கும் திட்டம் உள்ளிட்ட 45 புதிய திட்டங்கள் நிறைவேற்றப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.


முன்னதாக சொத்து வரி, மின் கட்டணம், பால்விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து அதிமுக மாநகராட்சி எதிர்கட்சி கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி தலைமையில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.


புதிய வரிகள் எதுவும் இல்லாமலும் அதே வேளையில் ரூபாய் 9.69 கோடி உபரி வருவாயை ஏற்படுத்தியிருக்கும் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி தாக்கல் செய்த பட்ஜெட் ஒரு மேஜிக் பட்ஜெட் தாக்கல் என பொருளாதார வல்லுநர்கள் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி பட்ஜெட் தாக்கலை பாராட்டி வருகின்றனர்.

  • Share on

கம் பேக் கொடுக்கனுமா? மேயர் ஜெகன் பெரியசாமியின் அதிரடி மிரட்டல் பேச்சால் அதிர்ச்சியான எதிர்கட்சிகள்!

தூத்துக்குடியில் அவலம் : நாட்டிற்காக உழைத்த செக்கிழுத்த செம்மலுக்கு இந்த நிலையா?

  • Share on