• vilasalnews@gmail.com

எங்க கூட்டணியை விடுங்க.. முதல்ல உங்க கூட்டணியை பாருங்க - பாஜகவுக்கு கனிமொழி அட்வைஸ்!

  • Share on

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் எதிர்காலத் திட்டங்கள் ஏதுமில்லை எனக் கூறி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்திருந்தார். இது குறித்த கேள்விக்கு கனிமொழி எம்.பி பதிலளித்துள்ளார்.


பொதுவாகவே இடைக்கால பட்ஜெட்டில் மிகப் பெரிய அறிவிப்புகள் இடம் பெறுவது வழக்கமில்லை. ஆனாலும், இந்த பட்ஜெட்டை முழுமையாக வாசித்துப் பார்த்தால், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கான ஆக்கப்பூர்வமான எதிர்காலத் திட்டங்கள் இருப்பதை உறுதி செய்ய முடியும். ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வெளிநடப்பு செய்ய வேண்டும் என்பதற்காக அவர் மேற்கொள்ளும் இந்த அரசியல் நாடகம் தேவையற்றது என்று கூறினார்.


கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பாஜக கிளப்பும் விமர்சனங்களுக்கு அவர் அளித்த பதிலில், பாஜக முதலில் அவர்கள் கூட்டணியைச் சரியாகப் பார்த்துக் கொண்டாலே போதும். மற்ற கூட்டணிகளைப் பற்றி அவர்கள் ஏன் கவலைப்படுகிறார்கள் எனத் தெரியவில்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாக மிக வலுவாக உள்ளது; இதில் மாற்றம் ஏற்பட வாய்ப்பே இல்லை.


மாநில சுயாட்சி தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதில் அளித்த கனிமொழி, தமிழகத்தின் மாநில உரிமைகளை டெல்லியில் கொண்டு போய் அடகு வைத்தது எடப்பாடி பழனிசாமி தான். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதுதான் திமுகவின் அடிப்படை அஸ்திவாரம். இந்தக் கொள்கை குறித்துப் புரிதல் இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவது வியப்பாக இருக்கிறது.

  • Share on

கழுகுமலை தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து - லட்சக்கணக்கில் பொருட்கள் சேதம்!

முத்தையாபுரம் அருகே சாலை விபத்து - இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழப்பு!

  • Share on