• vilasalnews@gmail.com

முத்தையாபுரம் அருகே சாலை விபத்து - இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழப்பு!

  • Share on

தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியைச் சேர்ந்தவர் டிராவின் (25). இவர் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று இரவு இவர் முத்தையாபுரத்திலிருந்து தூத்துக்குடி நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். முத்தையாபுரம் வடக்குத் தெரு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மீது டிராவினின் பைக் பயங்கரமாக மோதியது.


இந்த விபத்தில் பலத்த காயமடைந்த டிராவின், சிகிச்சை பலனின்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த் தலைமையிலான போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

எங்க கூட்டணியை விடுங்க.. முதல்ல உங்க கூட்டணியை பாருங்க - பாஜகவுக்கு கனிமொழி அட்வைஸ்!

ஸ்டெர்லைட் விவகாரம்... கிரீன் காப்பர் என்ற பெயரில் நுழைய முயற்சி? துரை வைகோ எம்.பி. கடும் எச்சரிக்கை!

  • Share on