• vilasalnews@gmail.com

ஸ்டெர்லைட் விவகாரம்... கிரீன் காப்பர் என்ற பெயரில் நுழைய முயற்சி? துரை வைகோ எம்.பி. கடும் எச்சரிக்கை!

  • Share on

தூத்துக்குடியில் 'கிரீன் காப்பர்' என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எடுக்கும் முயற்சிகளைத் தமிழக முதல்வர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்று மதிமுக முதன்மை நிலையச் செயலாளர் துரை வைகோ எம்.பி. தெரிவித்துள்ளார்.


திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பதை மதிமுக முழுமனதுடன் வரவேற்கிறது. இது கூட்டணியின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்தும். தமிழகத்தைப் பொறுத்தவரை நேரடிப் போட்டி என்பது திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு இடையேதான் உள்ளது. மதிமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்த விவரங்கள், பிப்ரவரி 22-ஆம் தேதி தொடங்கவுள்ள பேச்சுவார்த்தைக்குப் பிறகு முறைப்படி அறிவிக்கப்படும். ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய தேர்தல் இது என்பதால், இடங்களுக்காகக் கூட்டணித் தலைமைக்கு நெருக்கடி தராமல் வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும்.


நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசிய துரை வைகோ, மத்திய பாஜக அரசை எதிர்த்தோ அல்லது மாநில நலன் சார்ந்த விவகாரங்களிலோ அவர் இன்னும் தனது வெளிப்படையான நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. எனவே, அவரது அரசியல் பிரவேசம் திமுக கூட்டணிக்கே சாதகமாக அமையும், என்று குறிப்பிட்டார்.


தற்போது மக்காச்சோளத்தின் விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். இதற்கு மத்திய அரசு உரியத் தீர்வு கண்டு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைக் கொண்டு வர மறைமுக முயற்சிகள் நடக்கின்றன. ஆனால், மக்களின் உணர்வுகளை மதிக்கும் தமிழக முதல்வர் இதற்கு ஒருபோதும் இடம் தரமாட்டார் என்று உறுதிபடத் தெரிவித்தார்.


திமுக அரசின் சாதனைகள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனால் தேர்தல் பயத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேவையற்ற புகார்களைக் கூறி வருவதாகச் சாடினார்.

  • Share on

முத்தையாபுரம் அருகே சாலை விபத்து - இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழப்பு!

தூத்துக்குடியில் ஒரே நாளில் 3 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

  • Share on