• vilasalnews@gmail.com

பணியில் மதுபோதை .... 3 போலீசார் சஸ்பெண்ட் - தூத்துக்குடி எஸ்பி அதிரடி!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், பணியின் போது மது அருந்தி ஒழுங்கீனமாகச் செயல்பட்ட 3 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


நடவடிக்கைக்குள்ளான காவலர்கள்:

உலகநாதன் – சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் (குளத்தூர் காவல் நிலையம்)

அண்ணாத்துரை – போலீஸ் ஏட்டு (ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையம்)

தனுஷ்கோடி – போலீஸ் ஏட்டு (முத்தையாபுரம் காவல் நிலையம்)


சம்பந்தப்பட்ட மூன்று காவலர்களும் பணியில் இருந்தபோது மதுபோதையில் இருந்ததாக எஸ்பி-க்கு புகார்கள் வந்தன.எஸ்பி உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவர்கள் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது.முதற்கட்ட நடவடிக்கையாக  அவர்கள் மூவரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.


துறை ரீதியான விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தற்போது மூவரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்பி சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார்.


 "காவலர்கள் பணியின் போது மிகுந்த பொறுப்புடனும், எந்தவிதமான குற்றச்சாட்டுகளுக்கும் இடமளிக்காத வகையிலும் செயல்பட வேண்டும்" என எஸ்பி சிலம்பரசன் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Share on

மாமன்னர் திருமலை நாயக்கருக்குச் சிலை: அமைச்சர் கீதா ஜீவன் முக்கிய அறிவிப்பு!

விளையாட்டு வீரர்களுக்கு ஒரு ஆண்டுக்கால மருத்துவ உதவி : முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் நெகிழ்ச்சி நடவடிக்கை!

  • Share on