கோவில்பட்டி இனாம் மணியாச்சி பகுதியில் மாமன்னர் திருமலை நாயக்கர் இளைஞர் பேரவை சார்பில் 443-வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, திருமலை நாயக்கரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இப்பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான திருமலை நாயக்கர் உருவச்சிலையை அமைப்பதற்குத் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றார்.
"தேர்தல் வர இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், காலதாமதம் செய்யாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் கவனத்திற்கு இதைக் கொண்டு செல்வேன்" என அவர் பேசினார்.
இந்த விழாவில் நிறுவனத் தலைவர் சிவன் ராஜ், மாநிலத் தலைவர் மனோஜ் குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.



