கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சவாலாபேரி கிராமத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஆண்கள் கபாடி அரை இறுதி போட்டியை முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் தொடங்கி வைத்து கபாடி விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சிறப்புரையாற்றினார்.
மேலும், சவாலாபேரி கிராமத்தில் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயன்பெறும் வகையில் ஒரு வருடத்திற்கான முதலுதவி மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்களை வாங்குவதற்கு நிதி உதவி அளித்தார்.
இந்நிகழ்வில், சவாலாபேரி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பூல்பாண்டியன் தலைமை வகித்தார். திமுக மத்திய ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் பெரியசாமி முன்னிலை வகித்தார். இளைஞர் அணியினர் வரவேற்றார்கள். ராஜாபுது குடியைச் சேர்ந்த பால்ராஜ், சதீஷ்குமார் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த கபாடி விளையாட்டு வீரர்கள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




