• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மதமாற்றப் பிரச்சாரம்? - இந்து மக்கள் கட்சி புகார்!

  • Share on

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிலர் மதமாற்ற பிரச்சாரங்களில் ஈடுபடுவதாகவும், அவ்வாறு மதமாற்ற வரும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று இந்து மக்கள் கட்சியின் சார்பாக மருத்துவமனை முதல்வரிடம் மனு அளித்தனர்.


இந்த புகார் மனு தொடர்பாக இந்து மக்கள் கட்சி கூறுகையில்:-

மருத்துவமனையில் பணிபுரியும் பணியாட்கள் அங்கே வருகை தரும் நோயாளிகளிடம் இருந்து ஸ்ட்ரெச்சர் தள்ளுவதில் ஆரம்பித்து,  அங்கே எதை செய்தாலும் பணம் வாங்குவதற்கு அஞ்சுவதில்லை, மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டு பகுதியில் நோயாளிகளுடன் இருக்கும் நபரை கூட நோயாளிகளுடன் இருப்பதற்கு அனுமதிப்பதில்லை. ஆனால் இவர்கள் மதமாற்றம் செய்ய வரும் குழுவிற்கு மட்டும் அனுமதி அளிப்பது எப்படி? இது போன்ற பல்வேறு விதமான சந்தேகங்கள் எழுகின்றன. 


மிஷனரி கூட்டத்திலிருந்து மாத மாதம் கையூட்டுகளை வாங்கிக்கொண்டு இங்கே வரும் மிஷனரிகளினுடைய குழுவை மருத்துவமனைக்குள் ஒவ்வொரு வார்டுகளிலும் 2 அல்லது 3 நபர்களை மட்டும் அனுமதித்து மத மாற்றம் செய்ய இந்த காவலாளிகள் மற்றும் அங்கே பணிபுரியும் சில நபர்களும் உறுதுணையாக இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவமனை முதல்வரிடம் புகார் / கோரிக்கை மனு அளித்தோம். 


அதனைத் தொடர்ந்து மருத்துவமனை முதல்வரும் உடனடியாக அதனை சரி செய்வதாகவும் மருத்துவமனை முழுவதும் மதமாற்றம் செய்ய கூடாது என்று பதாகைகள் வைப்பதாகவும்,  மேலும் மருத்துவமனையில் மத பிரச்சாரம் செய்பவர்களை காவல்துறையிடம் ஒப்படைத்து மருத்துவமனை சார்பாக அவர்கள் மீது புகார் அளிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார் என்றனர்.


இந்த மனு அளிக்கும் நிகழ்வில் மாநில செயலாளர் வசந்தகுமார், மாநிலத் துணைத் தலைவர் ராமகுணசீலன் மாவட்ட அமைப்பாளர் சுடலைமணி, நைனா மற்றும் ஆர்வலர்கள் இராஜவேல், சிம்பு கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • Share on

விளையாட்டு வீரர்களுக்கு ஒரு ஆண்டுக்கால மருத்துவ உதவி : முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் நெகிழ்ச்சி நடவடிக்கை!

திருச்செந்தூர் திருவிழா: பிரிந்தவர்களைச் சேர்த்தும், உடமைகளை மீட்டுக் கொடுத்தும் அசத்திய தூத்துக்குடி போலீஸ்!

  • Share on