• vilasalnews@gmail.com

தூத்துக்குடி சிவன் - பெருமாள் கோவில்களுக்கு புதிய அறங்காவலர் குழு நியமனம்

  • Share on

தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோவிலுக்கு கந்தசாமி உள்ளிட்டோர் அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோவிலுக்கு செந்தில்குமார் உள்ளிட்டோர் அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.


தூத்துக்குடியில் பழமை வாய்ந்த சிவன் கோவிலான சங்கர ராமேஸ்வரர் மற்றும் ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோவிலுக்கு புதிதாக அறங்காவலர்களை நியமனம் செய்து இந்து சமய அறநிலையத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.


அதன்படி சங்கர ராமேஸ்வரர் கோவிலுக்கு கந்தசாமி, ஆறுமுகம், சாந்தி, ஜெயலட்சுமி, இளங்குமரன் ஆகியோர் அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.


ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோவிலுக்கு முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், மந்திரமூர்த்தி, மகேஸ்வரன், முருகேஸ்வரி, பாலசங்கர் ஆகியோர் அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளனர். வர்கள் அனைவரும் நேற்று ( 22.1.26 ) பொறுப்பேற்று கொண்டு கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்

  • Share on

அமமுகவில் இருந்து கடம்பூர் மாணிக்கராஜா நீக்கம் : டிடிவி தினகரன் அறிவிப்பு!

எதற்காக திமுகவில் இணைந்தார் கடம்பூர் மாணிக்கராஜா ? அவரே சொன்ன வாக்குமூலம்!

  • Share on