• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பீதியை கிளப்பும் வாட்ஸ்அப் ஆடியோ... பொதுமக்களுக்கு காவல்துறை கொடுத்த அறிவிப்பு!

  • Share on

வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து 6 இலக்க நம்பரில் இருந்து அழைப்பு வருகிறது. அந்த அழைப்பை ஏற்றால் வெடித்து விடும் என தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பேசுவதாக வாட்ஸ்அப் ஆடியோ பரவி வருவது குறித்து மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. 


தற்போது வாட்ஸ்அப்பில் ‘ஹலோ நான் தூத்துக்குடியில் இருந்து பேசுகிறேன், கஸ்டமர் காலில் 5 அல்லது 6 நம்பரிலிருந்து அழைப்பு வருது, அதை யாரும் அட்டன் பண்ண வேண்டாம் அதை அட்டன் பண்ணினால் பிளாஸ்ட் ஆகி செல்போன் வெடித்து விடும், தூத்துக்குடியில் 27 பேர் செத்துட்டாங்க, இத சேர் பண்ணுங்க” என வாட்ஸ்அப்பில் ஒரு ஆடியோ பரவி வருகிறது.


இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்ற எந்தவிதமான அசம்பாவிதம் நடைபெறவில்லை எனவும் இது பழைய வாட்ஸ்அப் ஆடியோ எனவும், அந்த பொய்யான வாட்ஸ்அப் ஆடியோவை தவறாக தற்போது மீண்டும் பரப்பப்பட்டு வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.


எனவே இந்த வாட்ஸ்அப் ஆடியோ குறித்து பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் எனவும் மேலும் இந்த வாட்ஸ்அப் ஆடியோவை யாருக்கும் பகிர வேண்டாம் எனவும் பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது.


இதுபோன்று பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலோ அல்லது பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலோ வாட்ஸ்அப்-ல் தவறான தகவலை பரப்புவது சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். மீறி மேற்படி ஆடியோவை சமூக வலைதளங்களில் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது. என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

தூத்துக்குடிக்கு வருகிறார் வாழும்கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

தூத்துக்குடி மாவட்டத்தில் அமமுகவிற்கு ஒதுக்கப்படும் 2 தொகுதிகள்!

  • Share on