• vilasalnews@gmail.com

கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் : தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

  • Share on

தூத்துக்குடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. 


தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (30.12.2025) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கியதைத் தொடர்ந்து, தூத்துக்குடி தருவை உள்விளையாட்டு அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தலைமையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். 


இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்ததாவது:


இந்நிகழ்ச்சியினை நம்முடைய துணை முதலமைச்சர் தற்போது தொடங்கி வைத்துள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் ஒவ்வொரு வார்டுகளுக்கு ஒரு கிரிக்கெட் பேட், டென்னிஸ் பேட், பால், சதுரங்கம் போர்டு, கேரம் போர்டு ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு உபகரணங்களை நம்முடைய மாநகராட்சி ஆணையாளர் மக்களுக்கு எப்படி கொடுப்பது என்று திட்டமிட்டுள்ளார்கள். இந்த விளையாட்டு உபகரணங்களை அனைத்து பூங்காக்களிலும், விளையாட்டு திடல்களிலும் வைத்து இளைஞர்களுக்கு உபயோகப்படுத்துவதற்கு முடிவு செய்துள்ளார்கள்.


துணை முதலமைச்சர் பொருப்பேற்ற நாள் முதல் இன்று வரை விளையாட்டுத்துறையை மேம்படுத்தி வருகிறார்கள். விளையாட்டின் தலைநகரமாக சென்னை விளங்குகிறது. விளையாட்டில் ஆர்வம் கொண்டு விளையாடுபவர்களுக்கு பணி நியமனங்களில் 3% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இதுவரை 100 பேர் பயனடைந்துள்ளனர். அதே போல் விரைவில் அடுத்த 100 நபர்களுக்கு இட ஒதுக்கீட்டில் பணி நியமனம் செய்யவதற்கு ஏற்பாடு செய்யப்படவுள்ளன. 


விளையாட்டு அரங்கம் இல்லாத இடங்களுக்கு விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. கிராமப்புற இளைஞர்களுக்கு முன்னதாகவே விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நகர்ப்புற இளைஞர்களுக்காக இன்றைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது. ஆசிரியர்களும், பெரியவர்களும் மற்றும் பெற்றோர்களும் நம்முடைய இளைஞர்களை விளையாட்டில் ஆர்வத்தை தூண்டவும், அனைவரும் விளையாட்டில் ஆர்வம் கொள்ளவும் தனி கவனம் எடுத்துக்கொள்ள வேண்டுமென கூறிக்கொண்டு விளையாட்டு பொருட்களை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார். 


இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரத்தினராஜ், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், வட்டச் செயலாளர் டென்சிங், மாவட்ட மருத்துவரணி தலைவர் அருண்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், பகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், வட்ட பிரதிநிதி பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


  • Share on

தூத்துக்குடியில் புத்தாண்டு கொண்டாட்டம்... காவல்துறை எச்சரிக்கை!

வீரபாண்டிய கட்டபொம்மன் 267வது பிறந்த நாள் விழா : பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்குழு அழைப்பு!

  • Share on