தூத்துக்குடியில் விடாது மழைக்கு நடுவே, எக்காரணம் கொண்டும் மழைநீரை ஊருக்குள் விட்டுவிடக் கூடாது என்று ஓடோடி பணி செய்யும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகனின் மக்கள் பணி, யாரு சார் இவரு என்று வியப்போடு பார்க்க வைக்கிறது.

வங்கக் கடலில் உருவான டித்வா புயல் தற்சமயம் இலங்கையின் மேல்நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடக்கு – வடமேற்கு திசையிலே நகர்ந்து தமிழ்நாட்டின் கடலோரமாக வடக்கு நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை (29.11.2025) மற்றும் நாளை மறுதினம் (30.11.2025) ஆகிய தினங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடுமையான மழைப்பொழிவு ஏற்படக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தூத்துக்குடியில் இன்று ( 28.11.25 ) காலை முதலே விடாது தூரல் மழை பெய்து வருகிறது. அதற்கு முன்னதாக பெய்த மழையினால் தூத்துக்குடியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி அதனை அப்புறப்படுத்தும் பணியும் உடனுக்குடன் நடைபெற்று வருகிறது.
டித்வா புயல் எதிரொலியாக தூத்துக்குடி துறைமுகத்தில் 4ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றபட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டி டிசம்பர் மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த அதி கனமழையின் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் பாதிப்புக்குள்ளாகின. அதில் தூத்துக்குடி மாநகர் பகுதியும் பெரும் பாதிப்புக்குள்ளானது.

எனவே இனி அத்தகைய சூழல் தூத்துக்குடி மாநகருக்கு வரக்கூடாது என்று, மழை வெள்ளத்தில் இருந்து தூத்துக்குடி மாநகரை காக்க வேண்டும் என்று அதற்காக தனி கவனம் செலுத்தி வருகிறார் மேயர் ஜெகன் பெரியசாமி.

அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மட்டுமல்லாது சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்று காலை முதல் கனமழை பெய்து வருவதன் காரணமாக, புறநகர் பகுதிகளில் இருந்து வெள்ளநீர் ஊருக்குள் வராமல் இருப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள ஓடையை மேயர் ஜெகன் பெரியசாமி இன்று ( 28.11.25 ) இரவு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், தற்போது வரை புறநகர் பகுதிகளில் இருந்து எந்த உபரி நீரும் மாநகருக்குள் வரவில்லை என்பதையும் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

மழை நிற்கட்டும் என்று இல்லாமல் கொட்டும் மழையிலும், தொடர் மழைக்கு நடுவிலும் மழைநீரால் மக்கள் பாதிப்படையக்கூடாது என்று அவரின் தன்னலமும், எந்தவொரு அரசியல் நடவடிக்கை பார்வையும் இல்லால் களத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி செய்யும் மக்கள் பணியை கண்டு, " கடும் மழைக்கு நடுவே யாரு சார் இவரு? என எல்லோரையும் வியக்க வைக்கிறது.




