• vilasalnews@gmail.com

தொடர் கொலை முயற்சி... கண்டு கொள்ளாத காவல்துறை... முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் குற்றச்சாட்டால் தூத்துக்குடியில் பரபரப்பு!

  • Share on

தன்னை தொடர்ந்து யாரோ கொலை செய்ய முயற்சிப்பதாக உமரிக்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், ஸ்ரீவைகுண்டம் யூனியன் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவருமான ராஜேஷ் குமார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து ராஜேஷ்குமார் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-


எனது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனத்தின் டயரில் உள்ள நட்டுகளை கழட்டி காரை விபத்து ஏற்படுத்தி என்னை கொலை செய்யும் நோக்கில் மர்ம நபர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர்.


இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எனது இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியது மட்டுமின்றி வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் மர்மநபர்கள் உடைத்து சென்று விட்டனர்.


நான் அரசியலில் வளர்ந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் சிலர் இதுபோன்று தன்னை கொலை செய்யும் நோக்கத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.


இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீசார் இதுகுறித்து கண்டு கொள்ளாமல் இருப்பதால் மாவட்ட ஆட்சியரிடம் வந்து புகார் தெரிவிக்கிறேன். மாவட்ட ஆட்சியர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனதில் தெரிவித்தார்.

  • Share on

தூத்துக்குடியில் இன்று மின்தடை

உறுதியற்ற கட்டிடத்தால் உதிரம் சிந்திய போலீஸ்... தூத்துக்குடியில் நடந்த பரிதாபம்!

  • Share on