• vilasalnews@gmail.com

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பிரதிநிதி இல்ல திருமண விழா : புதுக்கோட்டையில் நாளை நடக்கிறது!

  • Share on

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பிரதிநிதி வெயில்ராஜ் இல்ல திருமண விழா புதுக்கோட்டையில் நாளை ( அக்.,31 ) நடக்கிறது.


தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பிரதிநிதி, கூட்டுடன் காடு அய்யனார் காலனி வெயில்ராஜ் - நாராயண செல்வி தம்பதியினரின் மகன் உதய சிவாவுக்கும், கோவில்பட்டி பால்ராஜ் - செண்பகலட்சுமி தம்பதியினரின் மகள் செல்வ பாரதிக்கும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் புதுக்கோட்டை சத்யா மஹாலில் நாளை 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடக்கிறது.


இதில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சருமான கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம்  எம்எல்ஏ சண்முகையா, தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, தொழிலதிபர் முருகேசன் பாண்டியன், தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் ஜெயக்கொடி, இளைஞர் அணி தெற்கு மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர் மணி, மாடசாமி, தூத்துக்குடி மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர். விழா ஏற்பாடுகளை வெயில்ராஜ் நாராயண செல்வி, புதுமைராஜ் உள்ளிட்ட குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

  • Share on

பொதுமக்கள் நலனில் அக்கறை காட்டும் விளாத்திகுளம் அதிமுக ஒன்றியச் செயலாளர்கள்!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி... கருங்குளம் வடக்கு ஒன்றிய பாஜகவினர் மரியாதை!

  • Share on