• vilasalnews@gmail.com

பொதுமக்கள் நலனில் அக்கறை காட்டும் விளாத்திகுளம் அதிமுக ஒன்றியச் செயலாளர்கள்!

  • Share on
விளாத்திகுளம் - வேம்பார் சாலையில் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக அதிமுக விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் இராமச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் நெடுஞ்சாலைத்துறை பொறியாளரிடம் கோரிக்கை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் - வேம்பார் சாலையில் தீயணைப்பு நிலையம் அருகே அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு பல உயிரிழப்புகள் மற்றும் உடல் ஊனங்கள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. 


சமீபத்தில் நடந்த விபத்தில் கூட இருவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. எனவே, தீயணைப்பு நிலையம் அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதில் ஒன்றிய செயலாளர்கள் மகேஷ், பால்ராஜ், கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சண்முகசாமி, நகரத் துணைச் செயலாளர் ஆசைத்தம்பி, வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் ஆனந்த் உட்பட பலர் உடனிருந்தனர். 

  • Share on

தூத்துக்குடியில் நேர்மையான இளைஞர்கள் 2 பேருக்கு பொதுமக்கள் பாராட்டு!

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பிரதிநிதி இல்ல திருமண விழா : புதுக்கோட்டையில் நாளை நடக்கிறது!

  • Share on