• vilasalnews@gmail.com

விளாத்திகுளத்திற்கு புதிய அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் நியமனம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

  • Share on

விளாத்திகுளத்திற்கு புதிய அதிமுக ஒன்றிய செயலாளர்களை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் அதிமுக கட்சி அமைப்பு ரீதியாக விளாத்திகுளம் மேற்கே, கிழக்கு என செயல்பட்டு வந்த ஒன்றியங்கள், மாவட்ட அதிமுக நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம், விளாத்திகுளம் மத்திய ஒன்றியம், விளாத்திகுளம் மேற்கு ஒன்றியம் என பிரிக்கப்பட்டு அதற்கான ஒன்றியச் செயலாளர்களை நியமித்து அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


அதன்படி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியச் செயலாளராக ஓ.லட்சுமி நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த இரா.இராமச்சந்திரன், மத்திய ஒன்றியச் செயலாளராக பால்ராஜ், மேற்கு ஒன்றியச் செயலாளர் மகேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்



விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகள்

அரியநாயகிபுரம், இனாம் வேடப்பட்டி, கே.தங்கம்மாள்புரம், கீழ விளாத்திகுளம், கீழே வைப்பார், மந்திக்குளம், மேல்மாந்தை, எம்.சண்முகபுரம், நெடுங்குளம், பெரியசாமிபுரம், பி. மீனாட்சிபுரம், சூரங்குடி, எம். குமாரசக்கனாபுரம், தத்தனேரி, வைப்பார், வேம்பார் வடக்கு, விருசம்பட்டி, வேம்பார் தெற்கு


விளாத்திகுளம் மத்திய  ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகள்  

ஆற்றங்கரை, அயன் பொம்மையாபுரம், அயன் செங்கல்படை, குருவார்பட்டி, கே. சுந்தரேஸ்வரபுரம், மார்த்தாண்டம்பட்டி, பிள்ளையார் நத்தம், பூசனூர், புளியங்குளம், வேலிடுபட்டி, வில்வமரத்துப்பட்டி, ஜமீன் கரிசல்குளம், ஜமீன் கோடாங்கி பட்டி, ஜமீன் செங்கல்படை, சித்தவநாயக்கன்பட்டி 


விளாத்திகுளம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகள்

அருங்குளம், இனாம் சுப்பிரமணியாபுரம், கழுகாசலபுரம், குளத்தூர், கே. குமரெட்டியாபுரம், நமச்சிவாயபுரம், நீராவி புதுப்பட்டி, படர்ந்தபுளி, பேரிலோவன்பட்டி, ராமானூத்து, சக்கம்மாள்புரம், சிவஞானபுரம், டி.சுப்பையாபுரம்,  தலைக்காட்டுபுரம், வீரபாண்டியபுரம், வெள்ளையம்மாபுரம், வள்ளிநாயகபுரம், கமலாபுரம் 

  • Share on

கோவில்பட்டிக்கு வந்தது அறிவிப்பு... உரிமை கொண்டாடி மல்லு கட்டும் அதிமுக, பாஜக, மதிமுக!

தூத்துக்குடியில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

  • Share on