• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி செயலர்களுக்கான பணியிட மாற்ற உத்தரவு ரத்து!

  • Share on

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி செயலர்களுக்கு கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற வட்டார அளவில் பணியிட மாறுதலுக்கான உத்தரவு ரத்து செய்யப்படுவதாக விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி செயலர்களுக்கு, வட்டார அளவில் பணியிட மாறுதல் வழங்க கலந்தாய்வு கூட்டம் கடந்த 25.8.2025 அன்று நடைபெற்றது. இதில் ஊராட்சி செயலர்களுக்கு பணியிடமாறுதல் வழங்கி உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களால் அந்த  பணியிடமாறுதல் ரத்து செய்து உத்தரவிடப்படுகிறது என விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.


மேலும், அருங்குளம், ஆற்றங்கரை, அயன் பொம்மையாபுரம், அயன் செங்கல்படை, சித்தவ நாயக்கன்பட்டி, குருவார்பட்டி, கே. குமரெட்டையாபுரம், கே. சுந்தரேஸ்வரபுரம், கழுகாசலபுரம், ஜமீன் கரிசல்குளம், கீழ விளாத்திகுளம், கீழ வைப்பார், ஜமீன் கோடங்கிபட்டி, எம், சண்முகபுரம், நமச்சிவாயபுரம், நெடுங்குளம், படந்தபுளி, பெரியசாமிபுரம், பேரிலோவன்பட்டி


பிள்ளையார் நத்தம், புளியங்குளம், இராமனூத்து, சக்கம்மாள்புரம், ஏ. சுப்பிரமணியபுரம், தலைக்காட்டுபுரம், தத்தனேரி, வி. வேடப்பட்டி, வள்ளிநாயகிபுரம், வீரபாண்டியபுரம், வேலிடுபட்டி, வெள்ளையம்மாள்புரம், வில்வமரத்துப்பட்டி, விருசம்பட்டி, ஜமீன் செங்கல்படை உள்ளிட்ட 35 கிராம ஊராட்சிகளுக்கு


ஆகிய  கிராம ஊராட்சிகளில் மூன்று வருடத்திற்கு மேல் பணி புரியும் ஊராட்சி செயலர்களுக்கு 2.9.25 அன்று காலை 10.30 மணிக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஊராட்சியை தேர்வு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள தவறும் பட்சத்தில் கலந்தாய்வு முடிவற்ற பின் மீதமுள்ள ஊராட்சியில் இருந்து வட்டார வளர்ச்சி அலுவலர் பரிந்துரையின் அடிப்படையில் பணியிடம் வழங்கப்படும் என விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

சென்னையில் இருந்து திருச்செந்தூர், தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் : மத்திய அமைச்சரிடம் பாஜக கோரிக்கை!

ஊராட்சி செயலர் பணியிட மாற்றம்... முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தூத்துக்குடி ஆட்சியரிடம் புகார் மனு!

  • Share on