• vilasalnews@gmail.com

சென்னையில் இருந்து திருச்செந்தூர், தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் : மத்திய அமைச்சரிடம் பாஜக கோரிக்கை!

  • Share on

குலசேகரன்பட்டினம் தசரா, திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று பாஜக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக  மத்திய தகவல், ஒளிபரப்பு துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் எல்.முருகனிடம் பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-


தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவும், திருச்செந்தூர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவும் ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 


உலகப்புகழ் பெற்ற இவ்விழாக்களுக்கு, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா 10 தினங்கள் மிக சிறப்பாக நடைபெறும். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற பல்வேறு கடவுள் வேடங்கள் தரித்து விரதம் மேற்கொண்டு அம்மனை தரிசிக்க வருவார்கள்.


10 தினங்களும் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் குலசை திருவிழாவிற்கு வந்து செல்வார்கள், குறிப்பாக சென்னையில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அன்று, குலசேகரப்பட்டினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி வழிபாடு செய்வார்கள்.


அதே போன்று, திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவும் பல லட்சம் பக்தர்கள் வருகைதரக்கூடிய மிகப்பெரிய திருவிழாவாகும். தற்போதுள்ள இரயில் மற்றும் பேருந்து சேவைகள் போதுமானதாக இல்லாத காரணத்தினால். பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.


எனவே இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 02 ம் தேதி வரை நடைபெற உள்ள குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா, அக்டோபர் மாதம் 22ம் தேதி முதல் 27ம் தேதிவரை திருச்செந்தூர் முருகன் கோவிலில் சிறப்பாக நடைபெரும் கந்தசஷ்டி திருவிழாக்களுக்கு வருகைதர இருக்கும் பக்தர்களின் வசதிக்காகவும், 


அதேபோல் அக்டோபர் மாதம் 20ம் தேதி அன்று நாடுமுழுவதிலும் உற்சாகமாக கொண்டாடப்படுகின்ற தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கு வருகைதரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் சென்னையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி இரயில் நிலையத்திற்கு சிறப்பு இரயில்களை இயக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


மேலும் தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி பகுதி மக்கள் தனியார் ஆம்னி பேருந்துகளை நம்பி தான் பயணங்கள் மேற்கெள்ள வேண்டியுள்ளது. அதனால் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருச்செந்தூர் to சென்னை நேர்வழி ரயில் சேவையும், தூத்துக்குடி to சென்னைக்கு மேலும் ஒரு ரயில் சேவையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

  • Share on

ஒட்டப்பிடாரம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து : எம்எல்ஏ சண்முகையா நேரில் சந்தித்து ஆறுதல்!

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி செயலர்களுக்கான பணியிட மாற்ற உத்தரவு ரத்து!

  • Share on