ஒட்டப்பிடாரம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார்.
ஒட்டப்பிடாரம் அருகே ஓம் சரவணாபுரம் கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி - ராமலெட்சுமி குடும்பத்தினர் வீட்டில் நேற்றைய ( 28.8.25) தினம் திருமணம் நடைபெற்ற நிலையில், இன்றைய தினம் ( 29.8.25 ) திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதற்காக குடும்பத்தினருடன் வேனில் சென்று கொண்டிருந்த போது முறம்பன் அருகே எதிர்பாராத விதமாக வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் உடனடியாக சிகிச்சைக்காக ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்து உடனடியாக ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு எம்.சி.சண்முகையா, ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.
மேலும், அதிக காயமடைந்தவர்களை உயர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்து மருத்துவக்கல்லூரி முதல்வரை தொடர்பு கொண்டு காயமடைந்தவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்குமாறு எம்எல்ஏ கேட்டுக்கொண்டார்.



