• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் அஜிதா ஆக்னல் செய்த காரியம்.... வரிசை கட்டி நின்ற ஆட்டோக்கள்!

  • Share on

தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும்  மாநாட்டிற்கான விளம்பர பதாகைகளை ஆட்டோக்களில் ஒட்டும் நிகழ்வை தமிழக வெற்றிக்கழக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் துவக்கி வைத்தார்.


நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் பல்வேறு தரப்பினர் தங்களை இணைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு வெற்றி பேரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் பொதுமக்களை, இளைஞர்கள், பெண்களை நேரடியாக கியூ ஆர் ஸ்கேன் மூலம் ஸ்கேன் செய்து உறுப்பினராக சேர்ப்பதற்கான மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய் என்ற விளம்பர பதாகைகளை ஆட்டோக்களில் ஒட்டும் நிகழ்வு தூத்துக்குடியில் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக்கழக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களுக்கு சால்வை போட்டு வரவேற்றார். பின்னர் ஆட்டோக்களில் தமிழக வெற்றிக்கழக தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பில் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய் மற்றும் ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரையில் நடைபெறக்கூடிய தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கான விளம்பர பேனர்களை ஒட்டினார். இதில் ஏராளமான தமிழக வெற்றிக் கழகத்தினர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் கட்டண உயர்வு தீர்மானத்திற்கு அதிமுக எதிர்கட்சி கொறடா கடும் எதிர்ப்பு!

விளாத்திகுளத்தில் எடப்பாடி பழனிசாமி!

  • Share on