• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் கட்டண உயர்வு தீர்மானத்திற்கு அதிமுக எதிர்கட்சி கொறடா கடும் எதிர்ப்பு!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் குடிநீர் கட்டணத்தை உயர்த்தும் தீர்மானத்திற்கு தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக எதிர்கட்சி கொறடாவும், 51 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் மந்திரமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்தார்.


தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம், மாமன்ற கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக எதிர்கட்சி கொறடாவும், 51 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் மந்திரமூர்த்தி பேசுகையில்:-


தூத்துக்குடி மாநகராட்சியில் இன்று நடைபெறும் இந்த மாமன்ற சாதாரண கூட்டத்தில், 10 வது தீர்மானமான குடிநீர் கட்டணத்தை உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன். அதோடு, இந்த தீர்மானத்தை ரத்து செய்யவும் வலியுறுத்துகிறேன்.


மேலும், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கால்டுவெல் காலனியில் புதிதாக கட்டப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிடத்தை சில தினங்களுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது. ஆனால், ஏழை எளிய மக்கள் பயன்பெறக்கூடிய இந்த நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிடமானது திறக்கப்பட்டு 20 நாட்களே ஆன நிலையில், கட்டிடம் விரிசல் ஏற்பட்டு, கட்டிடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. 


இது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. ஆகவே, உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

  • Share on

3 வது நாளாக தொடர்ந்த போராட்டம்... கவின் வீட்டிற்கு விரைந்த அருணாதேவி ரமேஷ் பாண்டியன்!

தூத்துக்குடியில் அஜிதா ஆக்னல் செய்த காரியம்.... வரிசை கட்டி நின்ற ஆட்டோக்கள்!

  • Share on