• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் தமிழராக மோடி... உற்சாகத்தில் அரங்கம்!

  • Share on

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்ததையடுத்து நேற்று தூத்துக்குடியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.


மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர், 7.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.


விமான நிலையத்தில் அவரை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து அங்கு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை  திறந்து வைத்தார். 


வேட்டி சட்டையில் பிரதமர் மோடி


பிரதமர் மோடி நேற்று மாலத்தீவில் இருந்து நேரடியாக தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தார். விமானத்தில் இருந்து இறங்கிய பிரதமர், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையை அணிந்திருந்தார்.


பிரதமர் மோடி தமிழில் வணக்கம் எனக் கூறி தன் பேச்சை துவக்கினார். பேச்சை நிறைவு செய்த போதும் வணக்கம் என தெரிவித்தார்.


பிரதமர் மோடி தன் பேச்சை நிறைவு செய்வதற்கு முன், நான் உங்கள் உற்சாகத்தை காண்கிறேன். இந்த உற்சாகத்தின் வெளிப்பாடாக உங்கள் மொபைல் போனை எடுத்து ஒளியை காட்டுங்கள் என்றார். உடனே அனைவரும் தங்கள் மொபைல் போன் டார்ச்சை ஒளிரச் செய்து பிரதமரை நோக்கி உற்சாகமாக கையசைத்தனர்.


துவக்கி வைத்த திட்டங்கள்


தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூபாய் 450 கோடியில் கட்டப்பட்ட புதிய முனையம் 


விக்கிரவாண்டி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை வழித்தடத்தில் 2,350 கோடி ரூபாய் செலவில் 50 கிலோமீட்டர் 4 வழிச்சாலை


தூத்துக்குடியில் 200 கோடி ரூபாயில் துறைமுக 6 வழிச்சாலை  


தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் ரூ.285 கோடியில், ஆண்டுக்கு 69 லட்சம் டன் சரக்குகளை கையாளும் 3 வது சரக்கு தளவாட நிலையம் 


மதுரை - போடிநாயக்கனூர் ரயில் பாதையில் ரூ. 99 கோடியில், மின்மயமாக்கல் பணி 


நாகர்கோவில் டவுன் - கன்னியாகுமரி 21 கிலோமீட்டர், ஆரல்வாய்மொழி - நாகர்கோவில் சந்திப்பு 12.87 கிலோமீட்டர், நெல்லை - மேலப்பாளையம் 3.6 கிலோமீட்டர் இரட்டை ரயில் பாதைகள். 933 கோடி ரூபாய் செலவில், இவை நிறைவேற்றப்பட்டுள்ளன.


அடிக்கல் நாட்டியவை


நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அமைக்கப்படும் தலா 1000 மெகாவாட் திறன் உடைய மூன்றாவது, நான்காவது அணு உலைகளில் இருந்து மின்சாரத்தை வெளியே கொண்டு செல்வதுடன், மின் வழித்தட கட்டுமானம். திட்ட செலவு 550 கோடி ரூபாய்.

போட்டி கோஷம்


தூத்துக்குடியில் நேற்று இரவு நடந்த நிகழ்ச்சியில் 12,000 பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சி தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே தொண்டர்கள் குவிந்தனர். அப்போது பாஜக தொண்டர்கள், "ஜெய் ஸ்ரீ ராம், மோடி வாழ்க, பாரத் மாதா கி ஜே" என கோஷங்களை எழுப்பினர். கூட்டத்தில் பங்கேற்ற பாஜகவினர் ஒரே நேரத்தில் கோஷம் எழுப்பியதால் அரங்கமே அதிர்ந்தது.


உடனே, போட்டியாக திமுக தொண்டர்கள் முதல்வர் ஸ்டாலின் வாழ்க, துணை முதல்வர் உதயநிதி வாழ்க என எதிர் கோஷங்களை எழுப்பினர். இரு தரப்பிலும் மாறி மாறி கோஷங்களை எழுப்பிக் கொண்டே இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழா மேடைக்கு பிரதமர் மோடி வரும் வரை இரு தரப்பிலும் கோஷங்களை எழுப்பி கொண்டே இருந்தனர்.

  • Share on

2026ல் அதிமுக வெல்லும் தொகுதிகள் எத்தனை? தூத்துக்குடியில் நின்று அடித்துச் சொல்லும் எஸ்.பி.வேலுமணி!

அனுமதியின்றி ஜெப கூடங்கள்; மத பிரச்சாரம்... விமான நிலையத்திற்கு மகாகவி பாரதியார் பெயர் : இந்து முன்னணி தீர்மானம்!

  • Share on