தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு உரிய அளவில் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டத்தை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு உரிய அளவில் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் உள்ள எடை எந்திரங்கள், கடையில் உள்ள மின்னணு விற்பனை கருவியுடன் (எஸ்.ஓ.பி.) புளூடூத் அல்லது கேபிள் மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, எடை தராசில் சரியான எடை அளவு இருந்தால் மட்டுமே ரசீது வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
'புளூடூத்' மற்றும் கேபிள் மூலம் தராசுகளை மின்னணு விற்பனை கருவியுடன் (எஸ்.ஓ.பி.) இணைத்து சரியான எடை வந்தால் மட்டுமே ரசீது போடப்படுவதால் காலதாமதல் ஏற்படும் சூழலும் உள்ளதால் பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இதற்காக, இனி வரும் காலங்களில் ரேஷன் கடைகளுக்கு புதிதாக வாங்கப்படும் தராசுகள் தற்போது சூப்பர் மார்க்கெட்டுகளில் இருக்கும் எடை எந்திரம் போன்று ரசீது வழங்கும் எந்திரத்துடன் கூடிய நவீன தராசுகளாக வாங்க அரசு பரிசீலித்து வருவதாக கூட்டுறவுத்துறை வட்டார தகவல்கள் தெரிவித்து வருகின்றன.
இது ஒரு புறம் இருக்க, தூத்துக்குடியில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளில், 'புளூடூத்' மற்றும் கேபிள் மூலம் தராசுகளை மின்னணு விற்பனை கருவியுடன் (எஸ்.ஓ.பி.) இணைத்து சரியான எடை வந்தால் மட்டுமே ரசீது போடப்படுவதால், ஒவ்வொரு பொருட்களுக்கும் கடையில் எடையாளர்கள் ஏற்கனவே ரெடிமேடாக வெவ்வேறு எடைகளில் பொருட்களை பைகளில் கட்டி வைத்து, ரேஷன் கார்டுகளை பதியும் போது அந்த எடைகளை வைத்து சரியான எடை வந்து விட்டு, பின் பொதுமக்களுக்கு தனியா குறைந்த அளவில் எடை போட்டு பொருள்களை வழங்கும் முறைகேட்டு நடவடிக்கைகளில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபடுவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு உரிய அளவில் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டத்தை, ரேஷன் கடை ஊழியர்கள் ரேஷன் கார்டுகளை பதியும் போது அந்த எடைகளை வைத்து சரியான எடை வந்துவிட்டு, பின் பொதுமக்களுக்கு தனியா குறைந்த அளவில் எடை போட்டு பொருள்களை வழங்கும் நூதன முறைகேட்டை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆகவே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு உரிய அளவில் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டத்தை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.




