• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் ரூ.136 கோடியில் 3 மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை!

  • Share on

தூத்துக்குடியில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் 650 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை இன்னும் 3 மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்ட மக்களின் வசதிக்காக பல்வேறு அதிநவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை தூத்துக்குடி காமராஜர் நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வருகிறது. 7 மாடியில் 650 படுக்கை வசதிகள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்கங்கள், நவீன கருவிகளுடன் அமைக்கப்படுகிறது.  ரூ. 121 கோடியில் கட்டடமும், ரூ.15 கோடியில் மருத்துவ உபகரணங்களும் அமைக்கப்படுகிறது.


இங்கு இருதயம், மூளை, நரம்பியல், சிறுநீரகவியல், புற்றுநோய் சிகிச்சை மையம், குடல் இரைப்பை சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவுகள் சிடி ஸ்கேன் 4 லிப்ட் வசதிகள் அமைக்கப்பட உள்ளது.


தற்போது 90 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. மருத்துவ உபகரணங்கள் பொருத்துதல் உள்ளிட்ட இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.


இந்த மருத்துவமனை தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசதமாக அமையும். இன்னும் 3 மாதத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மருத்துவமனை திறக்கப்படும் என்று பல்நோக்கு சிறப்பு அரசு மருத்துவமனை கட்டிட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த பின் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். 


இந்த ஆய்வின் போது மருத்துவ கல்லூரி முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர் கலைவாணி, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வி, உதவி செயற்பொறியாளர் ஈஜின் ராகுல், உதவி பொறியாளர் ஜெனிஷா ஜெபமலர், திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், வட்ட செயலாளர் சுரேஷ்,  மாமன்ற உறுப்பினர்கள் சரவணகுமார், வைதேகி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில் குமார் மற்றும் பாஸ்கர், மணி, ஆல்பர்ட் ஆகியோர்  உடனிருந்தனர்.

  • Share on

தூத்துக்குடி காவல்துறையின் கஞ்சா தடுப்பு வேட்டையில் சிக்கிய 4 பேர் கைது!

நூதன முறைகேடா? தூத்துக்குடி ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு : பொதுமக்கள் கோரிக்கை!

  • Share on