தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருது 2 கிலோ 700 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் குரு வெங்கட்ராஜ் மேற்பார்வையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசார் மற்றும் தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கபீர்தாசன் ஆகியோர் இன்று (24.06.2025) தூத்துக்குடி மதுவிலக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்யாநகர் அருகே ரோந்து மேற்கொண்டபோது அங்கு சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனங்களில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த வசமுத்து மகன் அருண்சுனைமுத்து (22), கால்டுவெல்காலனியைச் சேர்ந்த பாலா மகன் ராஜ்குமார் (29), டிஎம்பி காலனியைச் சேர்ந்த மாடசாமி மகன் மாரி (எ) மாரிலிங்கம் (24), ஜார்ஜ் ரோடு பகுதியைச் சேர்ந்த சந்தனசேகர் மகன் சன்னத்பெருமாள் (27) ஆகியோர் என்பதும் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனடியாக மேற்படி போலீசார் 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 2 கிலோ 700 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



