• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் எஸ்பியை பொதுமக்கள் நாளை நேரில் சந்திக்கலாம்!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நாளை (25.06.2025) புதன்கிழமையன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் ஒவ்வொரு வாரமும்  புதன்கிழமைகளில் நடைபெறுவதை முன்னிட்டு நாளை (25.06.2025) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ளது என மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இக்கூட்டத்தில் காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகார்தாரர்கள் மற்றும் காவல் நிலையங்களில் மூன்று மாதங்களுக்கு மேல் நடவடிக்கை இல்லாத புகார்கள் குறித்து பொதுமக்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்கலாம் என்பதனை மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துள்ளனர்.

  • Share on

திருச்செந்தூர் குடமுழுக்கு விழா பணிகள் விவகாரம்... தூத்துக்குடி ஆட்சியர் அறிவுறுத்தல்!

தூத்துக்குடி காவல்துறையின் கஞ்சா தடுப்பு வேட்டையில் சிக்கிய 4 பேர் கைது!

  • Share on