• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மும்மத வழிபாட்டில் தவெக அஜிதா ஆக்னல்!

  • Share on

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் மும்மத வழிபாடு செய்தனர்.


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டும், 2026-இல் விஜய் தமிழக முதல்வராக வேண்டியும், தூத்துக்குடி மத்திய மாவட்ட கழகம் சார்பில், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில், தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் சிறப்பு ஜெபமும், அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுரை ஸ்ரீ சங்கரா ராமேஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு பூஜையும், தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் (பெரிய பள்ளிவாசல்) சிறப்புத் தொழுகையும், என்று மும்மத வழிபாடு செய்தனர்.


தொடர்ந்து, ஆட்டோ தொழிலாளர்கள், பனைத் தொழிலாளர்கள், நரிக்குறவர் சமுதாய மக்கள், மற்றும் மீன்பிடித் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். இதில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் நாளை தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம்!

தூத்துக்குடி எம்எல்ஏ அலுவலகம் தொழிலாளர்களே... அமைச்சர் கீதாஜீவன் அசத்தல்!

  • Share on