• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் நாளை தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம்!

  • Share on

தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் கீழ கூட்டுடன் காடு ஊராட்சி அய்யனார் காலனியில் வைத்து நாளை ( 22.6.25 ) மாலை நடைபெறுகிறது.


இந்நிகழ்ச்சிக்கு, ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் சண்முக நாராயணன் தலைமை வகிக்கிறார். துணை அமைப்பாளர்கள் ராஜ், பொன்.ஜோசுவா, சங்கர், வடிவேல் நாதன், விஜய் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வைக்கின்றனர். மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ் வரவேற்புரை ஆற்றுகிறார்.


திமுக துணைப் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற குழு தலைவரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, தெற்கு மாவட்ட செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்.


தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் ஜெயக்கொடி, தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பால்துரை, மிக்கேல் அருள் ஸ்டாலின், தலைமை பேச்சாளர் ஆத்தூர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்கின்றனர். அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் மகாலிங்கம் நன்றியுரையாற்றுகிறார்.

  • Share on

ரூ.3,055 செல்போனுக்கு ரூ.38,055 கிடைத்தது : தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு!

தூத்துக்குடியில் மும்மத வழிபாட்டில் தவெக அஜிதா ஆக்னல்!

  • Share on