• vilasalnews@gmail.com

பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம்... தூத்துக்குடியில் விஏஓ கைது!

  • Share on

தூத்துக்குடி அருகே பட்டா பெயர் மாற்றுவதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது விஏஓவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கை செய்தனர்.


தூத்துக்குடியை அடுத்த சங்கரப்பேரியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (45). இவரது மனைவி பெயரில் 4.5 சென்ட் நிலம் பண்டாரம்பட்டியில் உள்ளது. அவரது மனைவி கடந்த 2022 ஆம் ஆண்டு இறந்து விட்டார். இதையடுத்து அந்த நிலத்தின் பட்டாவை  வாரிசு அடிப்படையில் பெயர் மாற்றுவதற்கு சங்கரப்பேரி கிராம நிர்வாக அலுவலகத்தில் பிரபாகரன் விண்ணப்பித்துள்ளார்.


தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி (42) என்பவர் சங்கரப்பேரி கிராம நிர்வாக அலுவலராக உள்ளார். இந்த நிலையில்,  விஏஓ கணேசமூர்த்தி பட்டா மாறுதலுக்கு பிரபாகரனிடம் ரூ.3ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.  இதுகுறித்து பிரபாகரன் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பியிடம் புகார் அளித்துள்ளார். 


இதையடுத்து, டிஎஸ்பி பீட்டர் பால் அறிவுறுத்தலின் பேரில் விஏஓ அலுவலகத்தில் வைத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வி.ஏ.ஓ., கணேச மூர்த்தியிடம் பிரபாகரன் வழங்கியுள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக அவரை பிடித்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் வருவாய் துறை வட்டாரத்திலும், பொதுமக்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

ராஜாவின்கோவில் முதல் புதியம்புத்தூர் வரை புதிய சாலை : சண்முகையா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

2.46 கோடியில் புதிய உயர்மட்ட பாலம் : சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்!

  • Share on