ராஜாவின்கோவில் கிராமத்தில் உயர்மட்ட பாலத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா திறந்து வைத்தார்.
ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், ராஜாவின்கோவில் கிராமத்தில் மழைக்காலங்களில் பொதுமக்களின் போக்குவரத்திற்கு சிரமமாக இருந்த தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றி தர வேண்டும் என பொதுமக்கள் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் முகாமில் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையாவால் பொதுமக்களின் நலன் மற்றும் கோரிக்கையை கருத்தில் கொண்டு 2 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.
இதனையடுத்து, இன்று கட்டிமுடிக்கப்பட்ட உயர்மட்ட பாலத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன், பணி மேற்பார்வையாளர் கலையழகன், வருவாய் ஆய்வாளர் ஶ்ரீரங்க பெருமாள், கிராம நிர்வாக அலுவலர் ஜாபர் சாதிக், ஊராட்சி செயலர் முத்துராஜ்,

திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, ஒன்றிய துணை செயலாளர் சிவன், வர்த்தகர் அணி முத்துக்குமார், சிறுபான்மை அணி ஞானதுரை, மாணவரணி தங்கதுரை பாண்டியன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார், பொறியாளர் அணி பார்த்திபன், ராஜாவின் கோவில் கிளை செயலாளர் சிவமுருகன், புதியமுத்தூர் கிளைச் செயலாளர் சற்குணபாண்டியன் ராஜம்மாள், நகர் கிளை செயலாளர் டேவிட் ஞானசேகர், தளவாய்புரம் கிளை செயலாளர், பாலமுருகன், ஆதிதிராவிடர் அணி கருப்பசாமி, மூத்த உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



