விளாத்திகுளத்தில் வீட்டிற்கு மேல் செல்லும் சக்தி வாய்ந்த மின் வயரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தூத்துக்குடி விளாத்திகுளம் பங்களா தெருவைச் சேர்ந்த வையணன் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "எனது வீட்டிற்கு மேல் சக்தி வாய்ந்த மின் இணைப்பு வயர் செல்வதால் அச்சமாக உள்ளது. இந்த பவர் லைனை மாற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.



