• vilasalnews@gmail.com

ராஜாவின்கோவில் முதல் புதியம்புத்தூர் வரை புதிய சாலை : சண்முகையா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

  • Share on

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் ராஜாவின்கோவில் முதல் புதியம்புத்தூர் வரை 40 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில், முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன், பணி மேற்பார்வையாளர் கலையழகன், வருவாய் ஆய்வாளர் ஶ்ரீரங்க பெருமாள், கிராம நிர்வாக அலுவலர் ஜாபர் சாதிக், ஊராட்சி செயலர் முத்துராஜ்,


திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, ஒன்றிய துணை செயலாளர் சிவன், வர்த்தகர் அணி முத்துக்குமார், சிறுபான்மை அணி ஞானதுரை, மாணவரணி தங்கதுரை பாண்டியன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார், பொறியாளர் அணி பார்த்திபன், ராஜாவின் கோவில் கிளை செயலாளர் சிவமுருகன், புதியமுத்தூர் கிளைச் செயலாளர் சற்குணபாண்டியன் ராஜம்மாள், நகர் கிளை செயலாளர் டேவிட் ஞானசேகர், தளவாய்புரம் கிளை செயலாளர் பாலமுருகன், ஆதிதிராவிடர் அணி கருப்பசாமி, மூத்த உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் ராஜாவின் கோவில் முதல் புதியம்புத்தூர் வரை அமைக்கப்படும் இந்த சாலையின் மூலம் ராஜாவின்கோவிலில் இருந்து புதியமுத்தூர் செல்வதற்கு மூன்று கிலோமீட்டர் தூரத்தை பொதுமக்கள் தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடதக்கது.

  • Share on

சென்னையில் ரூ.20 கோடி வைர நகை கொள்ளை… தூத்துக்குடியில் கைது! - வைர நகை கொள்ளை கும்பல் சிக்கியது எப்படி?

பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம்... தூத்துக்குடியில் விஏஓ கைது!

  • Share on