• vilasalnews@gmail.com

விவாகரத்து கேட்ட நடிகர் விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?

  • Share on

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி வரும் சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக போட்டியிட உள்ளார். எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து களமிறங்கும் விஜய்க்கு இந்த தேர்தல் மிகவும் சவாலானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 


ஆனால், அவருக்கு வரும் தேர்தலில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையே நெருக்கடியாக மாறியுள்ளது. விஜய்யின் மனைவி சங்கீதா அவரிடம் இருந்து விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த காரணத்தாலே அவரிடம் இருந்து விவகாரத்து கோருவதாக  அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இது தவெக தொண்டர்கள் மத்தியிலும், விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் பெண் ரசிகைகள் அதிகளவு கொண்டவரான விஜய் மீதான இந்த குற்றச்சாட்டு மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 


விஜய்யின் மனைவி சங்கீதா அவரிடம் இருந்து விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள செய்தியை தாண்டி, விவகாரத்து கேட்பதற்காக காரணமாக விஜய்யின் மனைவி சங்கீதா குற்றம் சாட்டியுள்ள அந்த நடிகை யாராக இருக்கும் என்பதே பலரது தேடலும் ஆவலுமாக உள்ளது.  மூன்று எழுத்து கொண்ட நடிகை என்று கூறப்படுகிறது.


சங்கீதா தற்போது தாக்கல் செய்துள்ள மனுவில் விஜய் அந்த நடிகையுடன் வெளிநாட்டில் ஒன்றாக சுற்றியதாகவும், அந்த புகைப்படங்களை அந்த நடிகையே தனக்கு அனுப்பியதாகவும், பொருளாதார ரீதியாகவும் தனக்கு நெருக்கடி அளித்ததாகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். 12 பக்கங்கள் கொண்ட மனுவை சங்கீதா தாக்கல் செய்துள்ளார்.


தங்கள் வீட்டில் ஒருவராக விஜய்யை பல பெண்களும் கருதி வரும் நிலையில், அவர் மீதான இந்த குற்றச்சாட்டு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது. இந்த பிரச்சினையை விஜய் எவ்வாறு கையாளப்போகிறார்? என்பது தற்போது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.


விஜய்யின் மனைவி சங்கீதா குற்றம் சாட்டியுள்ள அந்த நடிகை மூன்று எழுத்து கொண்ட நடிகை என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

  • Share on

இரண்டரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் சிறுமி பலி : திமுக நிர்வாகி கைது!

திருச்செந்தூர் கட்டபொம்மன் மடம் விவகாரம் : முதலமைச்சரிடம் வைகோ நேரில் கோரிக்கை வைத்ததின் பின்னணி!

  • Share on