• vilasalnews@gmail.com

பெண் ஊழியருக்கு பார்சலில் வந்த மண்டை ஓடு - 3 பேர் கைது!

  • Share on

 சென்னை பாரிமுனையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு வந்த விசித்திரமான பார்சல், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 29 வயது இளம்பெண் ஸ்ருதி. இவர் பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் இயங்கி வரும் தனியார் டூல்ஸ் விற்பனை நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறார்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த நிறுவனத்திற்கு வந்துள்ளார். அங்கிருந்த பாதுகாப்பு காவலர் கிருஷ்ணலால் என்பவரிடம், ஸ்ருதிக்கு வந்த பார்சல் என்று கூறி ஒரு பார்சலை ஒப்படைத்துவிட்டுச் சென்றார். பாதுகாப்பு காவலர் அந்தப் பார்சலை ஸ்ருதியிடம் கொண்டு சேர்த்தபோது, தான் எந்தப் பொருளையும் ஆர்டர் செய்யவில்லை என அவர் மறுத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவலர், அந்த பார்சலைப் பிரித்துப் பார்த்தார். உள்ளே இருந்தப் பொருட்களைக் கண்டு அங்கிருந்தவர்கள் நிலைகுலைந்து போயினர்.  பார்சாலின் உள்ளே ஒரு மனித மண்டை ஓடு, மூன்று எலும்புத் துண்டுகள், ஒரு விபூதி பொட்டலம்ஆகியவை இருந்தன.


தகவல் அறிந்து விரைந்து வந்த எஸ்பிளனேடு காவல் துறையினர், தடயங்களைக் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பினர். சிசிடிவி  காட்சிகளை ஆய்வு செய்ததில், இந்த வினோத செயலில் ஈடுபட்டது ஓட்டேரியைச் சேர்ந்த தினேஷ் (37) என்பது உறுதியானது. விசாரணையில், ஸ்ருதியின் குடும்பத்திற்கும் தினேஷின் குடும்பத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. ஸ்ருதியைத் தாளாத பயத்தில் ஆழ்த்த வேண்டும் என்ற நோக்கில், இடுகாட்டிலிருந்து எலும்புகளைத் திருடி இவ்வாறு செய்ததாக தினேஷ் ஒப்புக்கொண்டார்.


இதனைத் தொடர்ந்து, முதன்மை குற்றவாளி தினேஷ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சிந்தாதிரிபேட்டையைச் சேர்ந்த ஜோசப் (60), சீனிவாசன் ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • Share on

முருக பக்தர்களின் உணர்வுகளை அரசு மதிக்கவில்லை: அண்ணாமலை காட்டம் - தமிழகம் முழுவதும் தீப வழிபாடு!

தமிழக அரசியலில் 'பெண்'களே கிங் மேக்கர்: இறுதி வாக்காளர் பட்டியல் சொல்லும் அதிரடித் தகவல்!

  • Share on