• vilasalnews@gmail.com

இலங்கை கடற்படை அட்டடூழியம் : ஒரே நாளில் 22 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு!

  • Share on

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நடவடிக்கை தொடர்கதையாகி வருகிறது. இன்று ஒரே நாளில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


10 மீனவர்கள் இரண்டு விசைப்படகுகளில் கடலுக்குச் சென்றபோது, எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதேபோல் மேலும் 12 மீனவர்கள் இரண்டு விசைப்படகுகளுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களும் சிறைபிடிக்கப்பட்டனர். மீனவர்கள் பயன்படுத்திய மொத்தம் 4 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது.


கைது செய்யப்பட்ட 22 மீனவர்களும் தற்போது மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு முதற்கட்ட விசாரணை முடிந்தவுடன், அவர்கள் அந்நாட்டு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்த விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்குத் தொடர்ந்து கடிதங்கள் வாயிலாக அழுத்தம் கொடுத்து வருகிறார். தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் மத்திய அரசு இதில் தலையிட்டு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

  • Share on

இனி ரூ.2000... மகளிருக்கு மீண்டும் ஒரு குட் நியூஸ் : சட்டப்பேரவையில் அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு!

தூத்துக்குடியில் தொடங்கும் சாலை ... முடியும் இடமும் திட்டமும் வேறு ரகம்!

  • Share on