• vilasalnews@gmail.com

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு!

  • Share on

தீபாவளி பண்டிகை வருகிற 20 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தீபாவளிக்கு மறுநாள் (21.10.2025) விடுமுறை விடப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-


இந்த ஆண்டு 20 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசுஅலுவலர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு 21 ஆம் தேதி ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 25 ஆம் தேதி பணி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

விஜய் மீது ஏன் வழக்கு பதியவில்லை? ஆவேசமாக கேட்ட திருமாவுக்கு திமுக கொடுத்த பதில்

நம்ம வீடு இருட்டா இருந்தா, அப்படியே விடுவோமா? - ஊரை வெளிச்சமாக்கிய காவலர் தம்பதி

  • Share on