• vilasalnews@gmail.com

திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு: செல்வப்பெருந்தகை சொன்ன முக்கிய தகவல்!

  • Share on

தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்த விவாதங்கள் அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளன. இந்நிலையில், எழுந்துள்ள பல்வேறு யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கமளித்துள்ளார்.


கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கும் இடமளிக்க வேண்டிய சூழலில், காங்கிரசுக்கு 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்ற நிலையில் திமுக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிக தொகுதிகளை எதிர்பார்க்கும் காங்கிரஸ் தலைமை, இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த ப.சிதம்பரம் தூதராக அனுப்பியது.


டெல்லி மேலிடத்தின் ஆலோசனையின் பேரில் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த ப.சிதம்பரம், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, திமுக தனது எண்ணிக்கையை 29 வரை உயர்த்த முன்வந்ததாகவும், இருப்பினும் காங்கிரஸ் 36 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இடையிலான சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமானது மட்டுமே என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக தரப்பிலிருந்து காங்கிரசுக்கு எந்தவிதமான காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார். திமுக - காங்கிரஸ் கூட்டணி மிகவும் வலுவாக இருப்பதாகவும், பேச்சுவார்த்தையில் எந்தவிதமான இழுபறியும் இல்லை.


தொகுதிப் பங்கீடு குறித்துத் தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. அனைத்தும் முடிவடைந்ததும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் செய்தியாளர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று  தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை  தெரிவித்துள்ளார்.

  • Share on

திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா? விஜய்யுடன் கைகோர்க்கும் கை? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்!

நாடாளுமன்றத்தில் முதன்முறையாக தேமுதிக... முரசு முழங்குமா? முடங்குமா?

  • Share on