எதிர்வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைக் குழுவை அறிவித்துள்ளது.
தோழர் எஸ். கலைச்செல்வம் தலைமையில் நடைபெற்ற மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், முத்தரசன், நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், பழனிசாமி ஆகியோர் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு வரும் பிப்ரவரி 27, 2026 அன்று திமுக தலைமையுடன் தனது முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையைத் தொடங்கவுள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ஒற்றுமையைப் பேணும் வகையிலும், உரிய தொகுதிகளைப் பெறுவது குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையில் விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



