2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதுவரை மூன்று கட்டங்களாகப் பல்வேறு முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். ஜனவரி 17, பிப்ரவரி 4 மற்றும் இன்று (பிப்ரவரி 24) ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்ட அந்த 17 முக்கிய வாக்குறுதிகளின் தொகுப்பு இதோ:
குலவிளக்குத் திட்டம்: குடும்பத் தலைவிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக மாதம் ரூ. 2,000 உதவித்தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இலவச கேஸ் சிலிண்டர்: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு 3 எரிவாயு சிலிண்டர்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
மகளிர் சுயதொழில்: சிறுபான்மையின வகுப்பைச் சேர்ந்த பெண்கள் சுயதொழில் தொடங்க வட்டியில்லா கடன் வசதி செய்து தரப்படும்.
இலவசப் பேருந்து பயணம்: தற்போது பெண்களுக்கு நடைமுறையில் உள்ள இலவசப் பேருந்து பயணம் தொடர்வதோடு, ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
150 நாள் வேலைத் திட்டம்: கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.
சொந்த வீடு: கிராமம் மற்றும் நகரங்களில் வீடற்ற ஏழைகளுக்கு அரசே நிலம் வாங்கி, அதில் கான்கிரீட் வீடுகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப்படும்.
பட்டியலின மக்கள்: கூட்டுக்குடும்பமாக வசிக்கும் பட்டியலின இளைஞர்கள் திருமணத்திற்குப் பின் தனிக்குடித்தனம் செல்லும்போது, அவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கான்கிரீட் வீடுகள் கட்டி வழங்கப்படும்.
பொருளாதார ஊக்கத்தொகை: விலைவாசி மற்றும் மின்கட்டண உயர்வைச் சமாளிக்க, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருமுறை நிதியுதவியாக ரூ. 10,000 வழங்கப்படும்.
கடன் ரத்து: சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மேலும், நகர்ப்புற நடைபாதை வியாபாரிகளின் கூட்டுறவு வங்கி கடன்களும் ரத்து செய்யப்படும்.
முதியோர் ஓய்வூதியம்: முதியோர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
வேலையில்லா பட்டதாரிகள்: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 2,000 மற்றும் பிளஸ்-2 முடித்தவர்களுக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கப்படும்.
பொங்கல் பரிசு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கப் பணமாக ரூ. 1,000 வழங்கப்படும்.
மின்சாரச் சலுகை: விசைத்தறி தொழிலாளர்களுக்கு 1,400 யூனிட் வரையிலும், கைத்தறி நெசவாளர்களுக்கு 450 யூனிட் வரையிலும் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
மீனவர் நலன்: மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ. 12,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
ஜல்லிக்கட்டு வீரர்கள்: ஜல்லிக்கட்டில் உயிரிழப்போர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் மற்றும் காயமடைவோருக்கு ரூ. 2 லட்சம் சிகிச்சை நிதியுதவி வழங்கப்படும்.
அம்மா இருசக்கர வாகனம்: 5 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மானியத்துடன் 'அம்மா இருசக்கர வாகனங்கள்' வழங்கப்படும்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
திமுக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்கள விலை உயர்வு, மின் கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை ஈடுகட்ட அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ 10000 ஒரு முறை வழங்கப்படும்.



