• vilasalnews@gmail.com

விஜய்யை சுற்றி வளைக்கும் விமர்சனங்கள்... அடுக்கடுக்கான கேள்விகளால் அதிரவைத்த திவ்யா சத்யராஜ்!

  • Share on

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை நோக்கி திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ் அடுக்கடுக்கான விமர்சனங்களையும், புதிய சவால் ஒன்றையும் முன்வைத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற மருத்துவ அணி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் குறித்து காரசாரமாகப் பேசினார்.


செய்தியாளர்களிடம் பேசிய திவ்யா சத்யராஜ்:-


உங்கள் கட்சியில் இருக்கும் ஒரு 10 தொண்டர்களின் பெயரையாவது பேப்பரைப் பார்த்துப் படிக்காமல் உங்களால் சொல்ல முடியுமா? நீங்கள்தான் இந்தக் கட்சியின் தலைவர் என்றால், இந்தச் சிறிய சவாலை ஏற்றுச் செய்து காட்டுங்கள் என்று கூறினார்.


விஜய்யின் சமீபத்திய பேச்சுக்களைச் சுட்டிக்காட்டிய அவர், மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைத் தேர்தல் அறிக்கையைப் பார்த்துச் சொல்கிறேன் என விஜய் கூறுகிறார். தொண்டை வலியால் மருத்துவரிடம் செல்லும்போது, அவர் புத்தகத்தைப் பார்த்துவிட்டு ஊசி போடுகிறேன் என்று சொன்னால் நாம் அங்கேயே இருப்போமா? மக்களுக்கு என்ன தேவை என்ற புரிதலே இல்லாதவரை மக்கள் எப்படி நம்புவார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.


தவெக மாநாடு மற்றும் கூட்டங்களில் நிகழ்ந்த பாதிப்புகள் குறித்துப் பேசிய திவ்யா, 

கரூர், சேலம் மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் நிகழ்ந்த உயிரிழப்புகளுக்கு நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், இதுவரை இதற்குப் பதில் சொல்லாமல் மௌனம் காப்பது ஏன்? என வினவினார். தூத்துக்குடி நிர்வாகி அஜிதா விவகாரத்தைச் சுட்டிக்காட்டி, அக்கட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.


திரையில் ஆடுபவர்கள் எல்லாம் தலைவர்கள் அல்ல. தரையில் இறங்கி மக்களுக்காகப் போராடுபவனே உண்மையான தலைவன். 'படையப்பா' நீலாம்பரி போல அறையில் அமர்ந்து ஸ்லோ மோஷனில் பேசுவது அரசியலுக்குச் செட் ஆகாது என்று கிண்டலாகப் பேசினார்.


தனது உரையின் இறுதியில் தவெக தொண்டர்களுக்கும் ஒரு சவாலை வைத்தார். உங்களால் முடிந்தால் இன்னும் மூன்று நாட்களுக்குள் உங்கள் கட்சித் தலைவர் விஜய்யுடன் புகைப்படம் எடுத்து என் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அனுப்புங்கள் என்று கூறினார்.

  • Share on

தேர்தலுக்கு முன் 'மெகா' சலுகைகள்? நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார் தங்கம் தென்னரசு!

முடிவுக்கு வந்த கூட்டணி சஸ்பென்ஸ்... அண்ணா அறிவாலயத்தில் பிரேமலதா விஜயகாந்த் - ஸ்டாலின் சந்திப்பு!

  • Share on